விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 4,262 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ.3.92 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறல்களைத் தடுக்கவும், விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் கடந்த 2 நாட்களுக்கு முன் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது, அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 2 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 4 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 46 பேர் மீதும், ஹெல்மல் அணியாமல் வாகனம் ஓட்டிய 1,711 பேரும், ஹெல்மட் அணியாமல் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற 306 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய 728 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதோடு, அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக 88 வாகன ஓட்டுநர்கள் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 69 பேர் உள்பட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 4,262 பேர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ.3,92,300 வசூல் செய்யப்பட்டது.