க்ரைம்

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 23 துப்பாக்கிகள் பறிமுதல்  

செய்திப்பிரிவு

மதுரை

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 23 ஏர் கன் ரக துப்பாக்கிகள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக மதுரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கிகள் தீவிரவாத கும்பலின் பயிற்சிக்காக கடத்தப்பட்டு வந்ததா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவாட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர்கள் முகம்மது கயூம்(வயது 39), இஜாஸ் அகம்மது(24), சிராஜ் (33). இவர்கள் மூவரும், நேற்று (செப்.24) மாலை 7 மணியளவில் துபாயிலிருந்து மதுரை வந்தனர்.

அவர்களது உடைமைகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு குறிப்பிட்ட பெட்டியைச் சோதனை செய்தபோது அலாரம் அடித்துள்ளது. உடனே அதனை திறந்துபார்த்துள்ளனர். அதில் 23 ஏர் கன் வகை துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக ரைஃபில் கிளப் உறுப்பினர் மட்டுமே விமனாத்தில் ஏர் கன் கொண்டு வர அனுமதியுள்ளது. ஆனால் முறையான ஆவணம் ஏதுமின்றி ரூ.40 லட்சம் மதிப்புள்ள 23 ஏர் கன் கொண்டு வந்ததது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

அவற்றைக் கொண்டுவந்தவர்களோ வணிக நோக்கில் கொண்டுவந்ததாகக் கூறினாலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது.

-எஸ்.ஸ்ரீநிவாசகன்

SCROLL FOR NEXT