க்ரைம்

வண்டலூர் அருகே ஊரப்பாக்கத்தில் குடோனில் பதுக்கிய 6 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்; இரண்டு பேர் கைது: போலீஸார் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

குன்றத்தூர்

வண்டலூர் அருகே ஊரப்பாக்கத் தில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற் பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 டன் புகையிலை பொருட் களை போலீஸார் பறிமுதல் செய் தனர்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச் சாலை வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் வாகனங்களில் கடத்தப்படு வதாக குன்றத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து, போலீஸார் தனிப்படை அமைத்து அப்பகுதியை தீவிர மாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்குகிடமாக வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தியபோது அவர், முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேக மடைந்த போலீஸார் விசார ணையை தீவிரப்படுத்தினர்.

இதில் அந்த நபர் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த அலிபாபா (வயது 52) என்பதும் அவரது இரு சக்கர வாகனத்தில், தடை செய்யப்பட்ட குட்கா இருந் தது தெரிய வந்தது. ஊரப்பாக் கத்தில் ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதையும் அவர் தெரி வித்தார்.

பின்னர் போலீஸார் ஊரப்பாக் கத்தில் சம்பந்தப்பட்ட அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட் கள் டன் கணக்கில் பதுக்கி வைக் கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

மேலும் போலீஸார் நடத் திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து புகையிலை பொருட்களை வேனில் ஏற்றி வந்து குடோனில் பதுக்கி வைப்பதும், பின்னர் இருசக்கர வாகனத்தில் வைத்து காலை நேரங்களில் சிறிய கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண் டிருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு வேலையில் இருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (34), அலிபாபா (52) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் குடோனில் பதுக்கி வைத்திருந்த 6 டன் புகையிலை பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்தி வந்த இரு சக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குடோன் உரி மையாளர் முருகனை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப் பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக் கும் என போலீஸார் தெரிவித் தனர்.

SCROLL FOR NEXT