துப்பாக்கியால் சுட்ட செல்லநேரு. (அடுத்த படம்) துப்பாக்கிச்சூடு நடந்த வங்கியை பார்வையிட்ட டிஐஜி ரூபேஷ்குமார் மீனா. 
க்ரைம்

மானாமதுரையில் ஜாமீனில் வந்தவருக்கு வெட்டு: வன்முறை கும்பலை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய வங்கி காவலாளி

செய்திப்பிரிவு

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் முன்விரோதத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உயிர் தப்பிப்பதற்காக வங்கிக்குள் நுழைந்தவரை அரி வாளோடு விரட்டிய கும்பல் மீது வங்கி காவலாளி துப்பாக்கி யால் சுட்டதில் ஒருவர் காயமடைந் தார்.

மானாமதுரை அமமுக ஒன்றி யச் செயலாளராக இருந்தவர் சரவ ணன். முன்னாள் கவுன்சிலரான இவரை ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக மே 26-ம் தேதி வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் தங்கராஜ், அவரது அண்ணன் தங்க மணி உட்பட 7 பேரை மானாமதுரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த தங்கமணி நேற்று காலை 11.45 மணியளவில் மரக் கடை பஸ் நிறுத்தம் கனரா வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது 2 மோட் டார் சைக்கிள்களில் அவரை பின் தொடர்ந்து வந்த பிச்சப்பனேந் தல் தமிழ்ச்செல்வம், ஆவரங் காடு மச்சக்காளை, சலப்பனேந் தல் பூமிநாதன், தங்கராஜ் ஆகி யோர் தங்கமணியை வழி மறித்தனர்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தங்கமணியின் நண்பர் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த கணேஷ்நாத் அவர்களைத் தடுத்தார். அவரை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தங்க மணியை விரட்டியது. தங்கமணி தப்பிப்பதற்காக அருகே இருந்த கனரா வங்கிக்குள் ஓடினார். அந்தக் கும்பலும் அவரை விரட்டிச் சென்று வங்கியில் நுழைந்து தங்கமணியை வெட்டியது. இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து வங்கிக் காவலாளி மழவராயனேந்தலைச் சேர்ந்த செல்லநேரு அரிவாள் வைத்திருந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் வலது காலின் கீழே குண்டடிபட்டு தமிழ்ச்செல்வம் கீழே விழுந்தார். இதைப் பார்த்ததும், மற்ற 3 பேரும் தப்பி ஓடினர். காயமடைந்த தமிழ்ச்செல்வம் மானாமதுரை அரசு மருத்துவமனையிலும், தங்கமணி, கணேஷ்நாத் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப் பட்டனர்.

சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் விசாரணை நடத்தினார். டிஐஜி ரூபேஷ்குமார் மீனா உள் ளிட்ட அதிகாரிகள் சம்பவம் நடந்த வங்கியைப் பார்வையிட்டனர். டிஐஜி கூறும்போது, தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும் போது ‘வங்கிக் காவலாளி முன் னாள் ராணுவவீரர் என்பதால் சரி யாகக் குறிபார்த்து காலில் சூட்டுள் ளார். இதனால் அந்தக் கும்பல் தங்கமணியை மீண்டும் வெட்டா மல் அங்கிருந்து தப்பியது. காவ லாளியின் செயலால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது என்றனர்.

SCROLL FOR NEXT