தமிழக பணிப் பிரிவு விரிவாக்க ஐஜி ஜெயராம் மாற்றப்பட்டு புதிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம் முன்னர் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்தார். தற்போது பணி பிரிவு விரிவாக்க ஐஜி-யாக பணியாற்றிவருகிறார். தற்போது அந்தப் பதவியிலிருந்து அமலாக்கப்பிரிவு ஐஜி-யாக மாற்றப்பட்டுள்ளார் இந்தப் பதவி புதிதாக உருவாக்கப்பட்ட பதவியாகும்.
ஏற்கனவே அமலாக்கப் பிரிவில் டிஜிபி அந்தஸ்திலும் ஏடிஜிபி அந்தஸ்திலும் பதவிகள் உள்ள நிலையில் புதிதாக ஐஜி அந்தஸ்து அளவில் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகத்தில் பெரிய அளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்