க்ரைம்

மதுரையில் துப்பாக்கிச்சூடு: ரவுடிகளைப் பிடிக்க போலீஸார் வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு

என்.சன்னாசி

மதுரை

மதுரை தெப்பக்குளம் பகுதியில் ரவுடிகளைப் பிடிக்க போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை காமராஜர் சாலை பகுதியில் நேற்றிரவு (சனிக்கிழமை) ரவுடிகள் சிலர் மது அருந்திக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் ரவுடிகளைக் கண்டித்துள்ளார்.

போதையில் இருந்த அந்த ரவுடி கும்பல் போலீஸாரை தாக்க வந்துள்ளது. உடனே அவர்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள சிவராமகிருஷ்ணன் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில் ரவுடிகள் கலக்கமடைந்தனர்.

வாகனத்திலிருந்த காவலர்கள் உதவியுடன் ரவுடிகளை உதவி ஆய்வாளர் பிடித்தார்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயற்சித்த குற்றத்திற்காக ரவுடி ராஜகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT