பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

புதுச்சேரி அடுக்குமாடிக் குடியிருப்பில் முதியவர் அடித்துக் கொலை

செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரி அடுக்குமாடிக் குடியிருப்பில் முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தத்துவா (60). இவர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இதனால் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு அறையில் தங்கிப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) அறையில் தலையில் தாக்கப்பட்ட நிலையில் தத்துவா, ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தத்துவா உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கோரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT