பாளையங்கோட்டையில் கொத்தனாரை வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அன்று 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்ததுள்ளனர்,
இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த சுரேஷ், மந்திரமூர்த்தி,ராஜா சின்ன துரை ஆகிய 3 பேர் இன்று (புதன்கிழமை) மதுரை மாவட்ட குற்றவியல் ஆறாவது நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.