க்ரைம்

நெல்லை அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

அசோக்

நெல்லை அருகே பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு முட்புதரில் வீசப்பட்டது. அக்குழந்தையை பொதுமக்கள் மீட்டனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழ பாலாமடை பகுதியில் குளத்தருகே இருந்த புதரில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அழுகுரல் கேட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் போலீஸார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தக் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக குழந்தையை குளத்தின் அருகே வீசிச் சென்றனர் என சீவலப்பேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT