க்ரைம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை ஏன்? - வங்கி கடனால் மன உளைச்சலில் இருந்ததாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர், வங்கிக் கடனால் கடும் மன உளைச்சலில் இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் (58), சென்னை மயிலாப்பூர், விஸ் வேஸ்வரபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு மனை வியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு. மாடியில் உள்ள அறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வில்லை. இதனால் சந்தேக மடைந்த அவரது மனைவி இரவு 9.20 மணியளவில் அவரது அறைக் குச் சென்று பார்த்தபோது, உள் பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந் தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த் தனர். அறையினுள் வேட்டியால் தூக்கிட்டு சந்திரசேகர் சடலமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மயிலாப்பூர் காவல் நிலைய போலீ ஸார், சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வக்கடை பிக்சேஸ்வரன் சந்திரசேகர் என்ற வி.பி.சந்திரசேகர், 1961-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார். பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருந்த அவர், தமிழக கிரிக்கெட் அணிக் காகவும், இந்திய அணிக்காக வும் விளையாடியுள்ளார். இந் திய அணிக்காக 1988 முதல் 1990 வரை 7 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாடியுள்ளார்.

ஓய்வுக்குப் பின்னரும் பயிற்சி யாளர், வர்ணனையாளர், ஆலோச கர் என பன்முகத்தன்மையுடன் விளங்கியுள்ளார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் இடம் பெற் றுள்ள காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியை ஏலம் எடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் எனவும் கூறப்படுகிறது.

சில வங்கிகளில் அவர் கடன் பெற்றிருந்ததாகவும், அதை திரும் பிச் செலுத்தும்படி வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர், தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அவரது செல்போனைக் கைப்பற்றிய போலீஸார், சந்திர சேகர், கடைசியாக யார், யாருடன் பேசியுள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுல் டிராவிட் அஞ்சலி

சந்திரசேகரின் உடலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கிரிக் கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய்சங்கர், முரளி விஜய் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர் கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT