க்ரைம்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி அருகே உள்ள காரிசேரியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இதனை சிவகாசியை சேர்ந்த தமிழ் என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து பட்டாசு தயாரித்து வருகிறார்.

இந்த ஆலையின் ஓர் அறையில் இன்று காலை மத்திய சேனையைச் சேர்ந்த மதியழகன் (45) என்பவர் மருந்து கலந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த அறை இடிந்து சேதம் அடைந்தது மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த விருதுநகர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT