க்ரைம்

ரயில் கொள்ளையனின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் பணம் எடுத்த காவல் ஆய்வாளர் இடை நீக்கம்

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (39). ரயில் கொள்ளையனான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சென்ட்ரல் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட15 ஏடிஎம் கார்டு களில் 13 கார்டுகளை மட்டும் ஆய் வாளர் கயல்விழி கணக்கில் காட்டியுள்ளார். மீதம் உள்ள 2 ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2.5 லட்சம் எடுத்து மோசடி செய்த தாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

வேப்பேரி குற்றப்பிரிவு ஆய் வாளராக பணியிடமாற்றம் செய் யப்பட்டு பின்னர் காவல் கட்டுப் பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். பண மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், கயல்விழியை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT