திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சி முன் னாள் திமுக மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாநகர போலீஸார், சிபிசிஐடி போலீ ஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
திருநெல்வேலியில் உமா மகேஸ்வரி (65), அவரது கணவர் முருக சங்கரன் (74), வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் (35) ஆகியோர் கடந்த 23-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் திருநெல்வேலி யைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (33) கைது செய்யப் பட்டார். திருநெல்வேலி 5-வது நீதித்துறை நடுவர் நிஷாந்தினி முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தப்பட்ட அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, எஸ்பி விஜய குமார், டிஎஸ்பி அனில்குமார் தலை மையிலான போலீஸார் விசார ணையை தொடங்கினர். வழக்கு தொடர்பான ஆவணங்களை தனிப்படை போலீஸார், சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்த னர். அந்த ஆவணங்கள், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தடயங் களை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்யத் தொடங்கினர்.
கார்த்திகேயனை போலீஸ் காவ லில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யும் பணி களையும் அவர்கள் மேற் கொண்டுள்ளனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக, திமுக பிரமுகர் சீனியம்மாள் உள்ளிட் டோருக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய குற்ற வாளியை கைது செய்த தனிப் படையினருக்கு, திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் என்.பாஸ்கரன் பாராட்டு தெரி வித்து, வெகுமதி வழங்கினார்.