க்ரைம்

குளித்தலை தந்தை, மகன் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை என்கிற ராமர்(70). இவரது மகன் வாண்டு என்கிற நல்ல தம்பி(44). இவர்களது வயலில் பூச் செடிகள் பயிரிட்டு பூ வியாபாரம் செய்து வந்தனர்.

முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றி யத்துக்கு சொந்தமான குளத்தை அப்பகுதியைச் சேர்ந்த பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலையில், ஆக்கிரமிப்பு களை அகற்றக் கோரி வீரமலை, நல்லதம்பி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, கடந்த வாரம் முதலைப்பட்டியில் உள்ள குளத்தை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு களை வீரமலை அடையாளம் காட்டினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நல்லதம்பி, வீரமலை ஆகிய இருவரையும் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இவ்வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்கிற பெருமாள்(35), ஜெயகாந்தன்(23), சசிகுமார்(33), பிரபாகரன்(27), ஸ்டாலின்(25), சோனை என்கிற பிரவீண்குமார் ஆகிய 6 பேர் மீது தவறான நோக்கத்துடன் ஒன்றுகூடு தல்(147), ஆயுதங்கள் வைத்திருத் தல்(148), கொலை செய்தல்(302) ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை ஆய்வாளர் பாஸ்க ரன், பசுபதிபாளையம் ஆய்வாளர் குணசேகரன், க.பரமத்தி ஆய்வா ளர் சிவகுமார் ஆகியோர் தலைமை யில் 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டு விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT