சென்னை
குட்கா வழக்கில் தொடர்புடைய குடோன் உரிமையாளர், பங்குதாரர் களின் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
தமிழகத்தில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட் களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2016-ல் சென்னை அருகே உள்ள ஒரு குட்கா குடோனில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங் கள் சிக்கின.
அங்கு கைப்பற்றப்பட்ட டைரி யில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. குட்கா முறை கேடு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
சிபிஐ குற்றப்பத்திரிகை
பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகின் றது. இந்த வழக்கில் ஏற்கெ னவே சிபிஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள னர்.
இதற்கிடையே, குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை நடந்த புகார் தொடர் பாக அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வரு கிறது. இதுதொடர்பாக அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூனில் வழக்கு பதிவு செய்தனர். அடையாளம் தெரியாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதி காரிகள், தனி நபர்கள் மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சட்ட விரோதமாக ரூ.639 கோடிக்கு குட்கா வியாபாரம் செய்ததாகவும், இதன்மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்நிலையில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோ ருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கி வைத்து அமலாக் கத் துறை நேற்று உத்தரவிட்டுள் ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா வில் 3 பேருக்கும் சொந்தமான 174 இடங்களில் உள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு இருப்ப தாக அமலாக்கத் துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.தமிழகம், புதுச்சேரி, மற்றும் ஆந்திராவில் 3 பேருக்கும் சொந்தமான 174 இடங்களில் உள்ள ரூ.246 கோடி மதிப்புள்ள, அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.