கோப்புப் படம் 
க்ரைம்

தூய்மைப் பணியின்போது காவல் நிலையத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர்

மன்னார்குடியில் காவல் நிலை யத்தில் தூய்மைப் பணி மேற் கொண்டபோது, பழமைவாய்ந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப் பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள நகர காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது, பழைய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரியில், பாலிதீன் கவரில் 3 அடி உயரம், 29 கிலோ எடை கொண்ட உலோகத்தாலான பெரு மாள் சிலை இருப்பது தெரியவந்தது. அந்த சிலையை மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் நேற்று வட்டாட்சியர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்.

காவல் நிலையத்தில் பெருமாள் சிலை எப்படி வந்தது? ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டு, அதை வேறு நோக்கத்துக்காக பயன்படுத் தும் எண்ணத்தோடு போலீஸார் யாரேனும் பதுக்கி வைத்திருந் தனரா? என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT