சென்னை
‘இனி வன்முறை மற்றும் தகரா றில் ஈடுபட மாட்டோம்’ என ‘ரூட் தல’ மாணவர்கள் போலீஸாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத் துள்ளனர். மேலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர்.
சென்னை பச்சையப்பன் கல் லூரி மாணவர்கள் கடந்த 23-ம் தேதி பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் சக மாணவர் களைத் தாக்கினர். இந்த காட்சி வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைக் கண்டு பெற்றோர்களும், பொதுமக் களும், போலீஸாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அரும் பாக்கம் போலீஸார் கைது செய்தனர். 2 மாணவர்களை கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்தார். ‘ரூட் தல’ விவகாரத்தால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
எனவே, கல்லூரி மாணவர் களுக்கு இடையேயான மோதலை தடுக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பச்சை யப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி, நந்தனம் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களுடன் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் ஆர்.சுதாகர் ஆலோ சனை நடத்தினார்.
சம்பந்தப்பட்ட 4 கல்லூரி மாண வர்களும் வரும் பேருந்துகளில் 6 வழித்தடங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இந்த வழித் தடங்களில் 90 ‘ரூட் தல’ மாணவர் கள் இருப்பதாகவும், அவர்கள் தான் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. அவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளன என்றும், அந்த மாணவர்களிடம் ‘இனி எந்த தவறும் செய்யமாட்டேன்’ என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்க இருக்கிறோம் என்றும் இணை ஆணையர் ஆர்.சுதாகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றவியல் விசா ரணை நடைமுறை சட்டம் பிரிவு 107-ன் படி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘ஆறுமாதத் துக்கு எந்த தவறும் செய்ய மாட்டேன்’ என 58 மாணவர் கள் போலீஸ் அதிகாரிகளிடம் நேற்று உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தனர்.
அதன்படி, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 54 மாணவர்கள் ‘இனி தவறு செய்ய மாட்டோம்’ என காவல் துணை ஆணையர் ஈஸ் வரன் முன்னிலையில் உறுதி மொழி பத்திரம் அளித்தனர். இந்த உறுதிமொழி பத்திரம் 6 மாதங் களுக்குப் பிறகு மீண்டும் புதுப் பிக்கப்படும் என கூறப்படுகிறது.
மாணவர்கள் மத்தியில் இது போன்ற மோதல் சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது. மீறி மோதல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாண வர்களை போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.