சென்னை
அயனாவரத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கொள்ளையடிக்க முயன்ற வழக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் கான்ஸ்ட பிள் சாலையில் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள் ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இங்கு பணம் எடுக்க அயனாவரம் பங்காரு தெருவைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (45) என்பவர் சென்றுள் ளார். ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை உள்ளிடும் பகுதியில் அவர் தனது கார்டை நுழைத்தபோது அது சிக்கிக் கொண்டுள்ளது. கார்டை வெளியே எடுத்தபோது சிறிய கருவி ஒன்றும் சேர்ந்து வந்துள்ளது. அது கார்டு தகவல்களை திருடும் ஸ்கிம்மர் கருவி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அயனாவரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு ஏடிஎம் கார்டின் ரகசியக் குறியீட்டு எண் பதிவிடும் நம்பர் போர்டின் மேல் பகுதியில் சிறிய அளவில் ரகசிய கேமரா பொருத்தப்பட் டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீ ஸார் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணையை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீ ஸார் விசாரணைக்கு மாற்றப்பட் டுள்ளது. இதுபோன்ற பல வழங்கு களை வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் திறம்பட கையாண் டுள்ளதால் குற்றவாளிகளை அவர் களால் எளிதில் பிடிக்க முடியும் என்ற வகையில் வழக்கு விசா ரணை மாற்றப்பட்டுள்ளது.
போலீஸாரின் முதல் கட்ட விசார ணையில் கடந்த 3-ம் தேதி முதல் வங்கி ஏடிஎம்மில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் எதுவும் சேமிக்கப்பட வில்லை என்பது தெரியவந்துள் ளது. எனவே, வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர்களுக்கு கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.