க்ரைம்

ரூ.5 கோடி பணம் கைமாறிய விவகாரம்: மத்திய மண்டல காவல் துறை உயர் அதிகாரிக்கு தொடர்பு

சிபிஐ விசாரிக்க தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்​சாவூரில் தனியார் மருத்​து​வ​மனை நிர்​வாகத்​திடம் ரூ.5 கோடி வாங்​கியதில் திருச்சி மத்​திய மண்​டல காவல் துறை உயர் அதி​காரிக்​கும் தொடர்பு இருப்​ப​தால், இந்த வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என வலியுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இது​தொடர்​பாக, தஞ்​சாவூர் தனியார் மருத்​து​வ​மனை நிர்​வாக இயக்​குநர் ஆர்.எம்.பாஸ்கரன், இயக்​குநர் சரவணன், வழக்​கறிஞர் தியாக.காம​ராஜ் ஆகியோர் தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தஞ்​சாவூர் வல்​லம் நெ.1 சாலை​யில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யில் பங்​குதா​ரராக இருந்த ஜெயஸ்ரீ ராமசாமி, சில காரணங்​களால் நிர்​வாகத்​தில் இருந்து வெளியேறினார்.

இதற்​காக அவருக்கு ரூ.19 கோடி வழங்க ஒப்​பந்​தம் செய்து கொண்​டோம். இதனிடையே, மருத்​து​வ​மனை​யில் கடந்​தாண்டு ஏற்​பட்ட பிரச்​சினை தொடர்​பாக வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்து மருத்​து​வ​மனை பங்​குதா​ரர்​கள், மேலா​ளர் என 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை விவகாரத்​தில் தலை​யிட்ட மத்​திய மண்​டல காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர், பிரச்​சினையை முடிக்​கவும், வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் உள்ள வழக்கு மீது மேல் நட​வடிக்கை எடுக்​காமல் இருக்​கவும் ரூ.5 கோடி தர வேண்​டும் என்​றும், அந்​தத் தொகையை தஞ்​சாவூரில் உள்ள காவல் ஆய்​வாளர் சுகுமாறனிடம் கொடுக்க வேண்​டும் என்​றும், பணம் தர​வில்லை​யெனில் பல்​வேறு இடையூறுகளுக்கு உள்​ளாவீர்​கள் என்​றும் மிரட்​டினார். இத​னால், வேறு வழி​யின்றி காவல் ஆய்​வாளர் சுகுமாறனிடம், ரொக்​கம் மற்​றும் காசோலை​யாக ரூ.5 கோடியை வழங்​கினோம். ஆனால், எங்​கள் மீதான வழக்கை ரத்து செய்​ய​வில்லை.

எனவே, எங்​களைப்​போல மற்ற யாரும் காவல் துறை உயர் அதி​காரி​களிடம் ஏமாறக் கூடாது என்​ப​தற்​காக, இவ்​வழக்கை சிபி​சிஐடி விசா​ரிக்க வேண்​டும் என தமிழக டிஜி​பி​யிடம் மனு கொடுத்​தோம். இதன்​படி, சிபி​சிஐடி போலீ​ஸார் விசா​ரணை நடத்தி காவல் ஆய்​வாளர் சுகுமாறனை கைது செய்​துள்​ளனர். ஆனால், இவ்​வழக்​கில் மத்​திய மண்​டல காவல் துறை உயர் அதி​காரிக்​குத் தொடர்பு இருப்​ப​தால், வழக்கு விசா​ரணை நேர்​மையாக நடை​பெறாது என கருதுகிறோம். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT