க்ரைம்

திருவள்ளூர், செங்குன்றம் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: சட்​ட​விரோத​மாக வங்​கதேசத்​தைச் சேர்ந்​தவர்​கள், திருவள்ளூர், செங்​குன்​றத்தில் தங்​கி​யிருப்​ப​தாக தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸாருக்கு நேற்று தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, சென்னை தீவிர​வாத தடுப்பு பிரிவு இன்​ஸ்​பெக்​டர் அருண்​பாண்​டியன் உள்​ளிட்ட போலீ​ஸார் நேற்று அதி​காலை திரு​வள்​ளூர் அருகே வேப்​பம்​பட்​டு, செங்​குன்​றம் அருகே உள்ள கிராண்ட்​லைன்- செல்​வ​வி​நாயகர் நகர் ஆகிய பகு​தி​களில் வீடு, வீடாகச் சென்று சோதனை மேற்​கொண்​டனர்.

          

அதில் வேப்​பம்​பட்டு பகு​தி​யில் வங்​க தேசத்​தைச் சேர்ந்த வாஸிம் அக்​ரம் (24). எம்டி மசரூல்​(20) கடந்த சில மாதங்​களாக உரிய அனு​ம​தி​யின்​றி, கட்​டு​மான பணி​களில் ஈடு​பட்டு வந்​ததும், அவர்​கள் உரிய அனு​ம​தி​யின்றி பெங்​களூரு மற்​றும் சென்​னை​யில் ஏற்​கெனவே பணிபுரிந்து வந்​ததும் தெரிந்​தது.

அதே போல். கிராண்ட்​லைன் செல்​வ​வி​நாயகர் நகர் பகு​தி​யில் வங்​கதேசத்​தைச் சேர்ந்த ஜோரூல் இஸ்​லாமோ (36), சஹால் இஸ்​லாம் (26), ஹேரல் இஸ்​லாம்​(31) ஆகியோர் கடந்த இரண்டு மாதங்​களுக்கு மேலாக உரிய அனு​ம​தி​யின்​றி, சட்​ட​விரோத​மாக தங்​கி, கட்​டு​மான பணி​களில் ஈடு​பட்டு வந்​தது தெரிந்​தது.

இதையடுத்​து, வாஸிம் அக்​ரம், ஜோரூல் இஸ்​லாமோ உள்​ளிட்ட 5 பேரை தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார், செவ்​வாப்​பேட்டை மற்​றும் செங்​குன்​றம் காவல் நிலை​யங்​களில் ஒப்​படைத்​தனர்.

இதுகுறித்​து, வழக்​குப் பதிவு செய்த செவ்​வாப்​பேட்டை மற்​றும் செங்​குன்​றம் போலீ​ஸார், வாஸிம் அக்​ரம் உள்​ளிட்ட 5 பேரை நேற்று கைது செய்​து, திரு​வள்​ளூர், பொன்​னேரி ஜே.எம். நீதி​மன்​றங்​களில் ஆஜர்​படுத்​தி, சென்​னை, புழல் சிறை​யில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT