க்ரைம்

சென்னையில் இந்த ஆண்டு இதுவரை ரூ.455 கோடி சைபர் மோசடி: விழிப்புடன் செயல்பட காவல் ஆணையர் அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை காவலர்​களின் குடும்​பத்​தினரின் நலனுக்​காக, ஆயிரம் விளக்கு கொச்​சின் அவுஸ் மற்​றும் மக்​கீஸ் கார்​டன் காவலர் குடி​யிருப்பு வளாகங்​களில் சிறு​வர் விளை​யாட்​டுத் திடல், உடற்​பயிற்சி உபகரணங்​கள் மற்​றும் நடைபயிற்​சிப் பாதையுடன் அமைக்​கப்​பட்​டுள்ள புதிய பூங்​காக்​களை காவல் ஆணை​யாளர் அமல்​ராஜ் நேற்று திறந்து வைத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் காவல் ஆணை​யாளர் அமல்​ராஜ் கூறிய​தாவது: கொச்​சின் அவுஸ் காவலர் குடி​யிருப்​பில் ரூ.20 லட்​சம் செல​வில் சிறு​வர் பூங்கா அமைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னை​யில் மொத்​தம் 74 இடங்​களில் காவலர் குடி​யிருப்​பு​கள் உள்​ளன. இட​வசதி மற்​றும் தேவைக்​கேற்ப மற்ற குடி​யிருப்​பு​களி​லும் இதுபோன்ற பூங்​காக்​கள் படிப்​படி​யாக அமைக்​கப்​படும்.

போலி இணை​யதளங்​களை உரு​வாக்கி வாகன ஓட்​டிகளிடம் பணம் மோசடி செய்த விவகாரம் தொடர்​பாக சைபர் க்​ரைம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதில் தொடர்​புடைய சிலரை அடை​யாளம் கண்​டுள்​ளோம். விரைவில் கைது நட​வடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.22.30 கோடி ஆன்​லைன் மூலம் மோசடி செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாகவும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்த வழக்​கில் சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இது​தொடர்​பான விவரங்​கள் விரைவில் தெரி​விக்​கப்​படும்.

சென்​னை​யில் இந்த ஆண்டு இது​வரை சுமார் ரூ.455 கோடி அளவுக்கு சைபர் குற்ற மோசடிகள் நடை​பெற்​றுள்​ளன. இதில் சுமார் 20 சதவீத பணத்தை பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மீட்​டுக் கொடுக்க வாய்ப்​புள்​ளது. சைபர் மோசடிகளைத் தடுக்க தொடர்ந்து நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

பொது​மக்​கள் சைபர் நிதி மோசடி​யில் பாதிக்​கப்​படா​மல் விழிப்​புடன் செயல்​பட வேண்​டும். பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தாமதிக்​காமல் உடனடி​யாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்​ணைத் தொடர்​பு​கொண்டு புகார் அளிக்க வேண்​டும்.

பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் பணத்தை மீட்டு ஒப்​படைப்​பது தொடர்​பாக ரிசர்வ் வங்கி அதி​காரி​களு​டனும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டுள்​ளது. இவ்வாறு காவல் ஆணை​யாளர் அமல்ராஜ் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT