க்ரைம்

விழுப்புரத்தில் வியாபாரியிடம் பட்டப்பகலில் துணிகரம்: கத்தி முனையில் 4 கிலோ தங்கம் கொள்ளை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: ​விழுப்​புரத்​தில் பட்​டப்​பகலில் மக்​கள் நடமாட்​டம் மிகுந்த பகு​தி​யில் நகை வியாபாரியை வழி மறித்து கத்திமுனையில் சுமார் 4 கிலோ நகையை கொள்​ளை​யடித்து சென்​றவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

விழுப்​புரம், விராட்​டிக்​குப்​பம் பாதை ஜனக​ராஜ் கார்​டன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ராஜ​மாணிக்​கம் (43). தங்க நகை பட்​டறை நடத்தி வரு​கிறார். இவர் சென்னை சவு​கார்​பேட்​டை​யில் தங்கக் கட்​டிகளை வாங்கி வந்​து, ஆபரண நகைகளாக தயாரித்து கொடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

          

இவ்​வாறு தயாரிக்​கப்​பட்ட தோடு, ஜிமிக்கி, சங்கிலி, வளையல் உள்ளிட்ட ஆபரண நகைகளு​டன், சென்​னைக்கு செல்​வதற்காக விழுப்​புரம் ரயில் நிலையம் நோக்​கி, தனது இருசக்கர வாக​னத்​தில் நேற்று காலை புறப்பட்டுச் சென்​றார். அவருடன், அவரது உதவி​யாளர் முரளி என்​பவரும் வந்​துள்​ளார்.

பெரு​மாள் கோயில் தெரு​வில் கோட்டை விநாயகர் கோயில் அருகே வந்​த​போது, 2 இருசக்கர வாக​னத்​தில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் ராஜ​மாணிக்​கத்தை வழிமறித்து கத்​தி​யைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த நகைப் பையை வலுக்கட்டாயமாகப் பறித்​துள்ளனர். அப்​போது அவருக்கு காயம் ஏற்​பட்​டுள்​ளது.

வழிப்பறி செய்யும்போது மக்​களிடம் கொள்​ளை​யர்​கள் சிக்​கி​னால் அவர்​களை பாது​காக்க, கூடு​தலாக 2 பைக்​கு​களில் ஆயுதங்​களு​டன் 4 பேர் வந்​துள்​ள​தாகத் தெரி​கிறது. கொள்ளைச் சம்​பவத்தை அறிந்த விழுப்​புரம் எஸ்பி சாய் பிரனீத் மற்​றும் போலீ​ஸார் விரைந்து வந்து விசா​ரணை நடத்​தினர்.

கண்​காணிப்பு கேம​ராக்​களும் ஆய்வு செய்​யப்​பட்​டன. சுமார் 4 கிலோ நகை கொள்​ளை​ய டிக்​கப்​பட்​ட​தாக விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதன் மதிப்பு ரூ.6 கோடி​யாகும். இதற்​கிடை​யில் கொள்ளை சம்​பவத்​தின்போது துப்​பாக்கி பயன்​படுத்​தப்​பட்​ட​தாக வெளி​யான தகவலை போலீ​ஸார் மறுத்​துள்​ளனர்.

கொள்​ளை​யர்​களை பிடிக்க அண்டை மாவட்ட போலீ​ஸாருக்​கும் தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் நகை வியாபாரி ராஜ​மாணிக்​கம், அவருடன் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​களிட​மும் போலீஸார் தொடர் விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.

விழுப்​புரம் நகர போலீ​ஸார் வழக்கு பதிந்து 5 தனிப்​படை அமைத்​துள்​ளனர். இந்த நகை கொள்ளை விவ​காரத்தை வரு​மான வரித் துறை மற்​றும் அமலாக்கத் துறை விசா​ரணைக்கு உட்​படுத்​தி​னால் முழு விவரம் தெரிய​வரும் என நகை வியாபாரிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT