க்ரைம்

சென்னையில் அடுத்தடுத்து வழிப்பறி: 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த ஆகாஷ் (22), கடந்த 16-ம் தேதி அதி​காலை பைக்​கில் சென்ற போது, 4 பேர் கும்​பல் ஒரு சிறு​வனைத் தாக்கி செல்​போனை பறித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதை தட்​டிக்​கேட்ட ஆகாஷை, அந்​தக் கும்​பல் கத்​தி​யால் தாக்​கி​விட்டு தப்​பிச் சென்​றது. இதில் காயம் அடைந்த ஆகாஷ், பெரி​யார் நகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இதே​போல், சென்னை புளியந்​தோப்பு கன்​னி​காபுரத்​தைச் சேர்ந்த வெங்​கடேசன் (45), கடந்த 16-ம் தேதி அதி​காலை ஓட்​டேரி மங்​களபுரம் பகுதியில் நடந்து சென்ற போது பைக்​கில் வந்த 4 பேர், கத்​தி​யைக் காட்டி மிரட்டி, சட்​டைப்​பை​யில் வைத்​திருந்த பணத்தை பறித்​து சென்றனர்.

ஓட்​டேரி போலீ​ஸார் நடத்திய விசா​ரணை​யில், இந்த 2 வழிப்​பறி சம்​பவங்​களி​லும் தொடர்​புடைய வியாசர்​பாடியை சேர்ந்த தினேஷ் (23), ஓட்​டேரி வாழைமா நகரைச் சேர்ந்த சதீஷ் (18) ஆகியோரை கடந்த 16-ம் தேதி கைது செய்​தனர்.

இதைத் தொடர்ந்து தலைமறை​வாக இருந்த ஓட்​டேரியைச் சேர்ந்த விக்​னேஷ் (20), சதீஷ்கு​மார் (20) ஆகியோரை மறு​நாள் கைது செய்​தனர். கைது செய்​யப்​பட்ட 4 பேரும் புழல் சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT