முகமது மஸ்​தான் சர்​புதீன், சீனி​வாசன், சரத்

 
க்ரைம்

கஞ்சா வழக்கில் சினிமா தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது: அதிமுக ஆதரவாளர்களை அழைத்து வந்ததால் காவல் நிலையம் முற்றுகை

செய்திப்பிரிவு

சென்னை: கஞ்சா வழக்கில் சினிமா தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்​களிட​மிருந்து ரூ.27.91 லட்​சம் பணம், கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதன் பின்​னணி​யில் வேறு யாரேனும் உள்​ளன​ரா? என விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

போதைப் பொருட்​கள் விற்​பனை, கடத்​தல் மற்​றும் பதுக்​கலுக்கு எதி​ரான நடவடிக்​கையை சென்னை போலீ​ஸார் தீவிரப்​படுத்தி உள்​ளனர். இதன் தொடர்ச்​சி​யாக திரு​மங்​கலம் போலீ​ஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப்பிரிவு போலீ​ஸார் கடந்த 19-ம் தேதி திரு​மங்​கலம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

குறிப்​பாக திரு​மங்​கலத்​தில் உள்ள பார்க் சாலை​யில் கண்​காணித்​த​போது அங்கு சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்​றிருந்த பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரன் (26) என்​பவரைப் பிடித்து விசா​ரித்​தனர். அவரிட​மிருந்து எல்​எஸ்டி எனும் போதை ஸ்டாம்புகள் மற்​றும் 2 செல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் தேனாம்​பேட்​டையைச் சேர்ந்த முகமது மஸ்​தான் சர்​புதீன் (44), முகப்​பேரைச் சேர்ந்த சீனி​வாசன் (25), வளசர​வாக்​கத்​தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேரை கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து ரூ.27.91 லட்​சம், உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இதில் சர்​புதீன் சினிமா இணை தயாரிப்​பாளர் எனவும், நடிகர் சிம்பு நடித்த ஈஸ்​வரன் என்ற படத்​தில் இணை தயாரிப்​பாள​ராக இருந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. சர்​புதீனிடம் இருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட பணம் ஹரி பிர​சாத் என்​பவருடையது எனத் தெரிய​வந்​தது.

எனவே அதி​முக​வுக்கு ஆதர​வாகச் செயல்​படும் நிறுவனத்தில் பணி​யாற்றி வரும் வியூக வகுப்​பாள​ரான ஹரி பிர​சாத், சாய் ஆகியோரை போலீ​ஸார் அழைத்து வந்து விசா​ரித்​தனர்.

இதையறிந்த அதி​முக​வினர் அரும்​பாக்​கம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​ட​தால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. பின்​னர் முழு​மை​யான விசா​ரணைக்​குப் பின்​னர் இரு​வரும் விடுவிக்​கப்​பட்​டனர்.

அப்​போது செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த முன்​னாள் அமைச்​சர் கோகுல இந்​தி​ரா, “எந்த தவறும் செய்​யாத எங்​கள் கட்​சிக்கு ஆதர​வாகப் பணிபுரி​யும் இரு​வரை போலீ​ஸார் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர்.

அவர்​களுக்​காக போலீ​ஸாரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினோம். தற்​போது ஆவணங்​கள் எது​வும் அவர்​களிட​மிருந்து கிடைக்​காத​தால் இரு​வரை​யும் போலீ​ஸார் விடு​வித்​தனர்.

அதி​முக​வுக்​காக பணிபுரி​யும் நபர்​கள் யாராக இருந்​தா​லும் அதி​முக எப்​போதும் அவர்​களு​டன் துணை நிற்​கும்” என்​றார்.

இது ஒரு​புறம் இருக்க சர்​புதீன் சினிமா பிரபலங்​கள், மாடலிங் துறை​யினர் உட்பட பல்​வேறு துறை​களைச் சேர்ந்​தவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக போதைப் பொருட்​களை வைத்​திருந்​தா​ரா? இவரது பின்​னணி​யில் வேறு யாரேனும் உள்​ளன​ரா? என போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT