க்ரைம்

வண்டலூர் | நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்டலூர் அடுத்த மண்​ணி​வாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்​தவர் சாந்தி (56). இவரது மகள் தட்​சிணா​மூர்த்தி என்ற ஆட்டோ ஓட்​டுநரை காதலித்து திரு​மணம் செய்து கொண்​டார்.

சாந்​தி​யும் அவரது மகளும் வேளச்​சேரி​யில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்​கின்​றனர். இந்​நிலை​யில் மே 22-ம் தேதி வேலைக்​குச் சென்று மாலை வீடு திரும்​பிய சாந்தி பீரோ​வில் இருந்த 24 சவரன் நகை, ரூ.2 லட்​சம் திருடு போயிருப்​பது கண்டு அதிர்ச்சி அடைந்து வண்​டலூர் - ஓட்​டேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

இதையடுத்து சாந்​தி​யின் மரு​மகன் தட்​சிணா​மூர்த்​தியை அழைத்து விசா​ரணை செய்​த​ போது முன்​னுக்கு பின் முரணாக பதில் அளித்​தார்.

இதில் சந்​தேகமடைந்த போலீ​ஸார் அப்​பகு​தி​யில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​த​தில் தட்​சிணா​மூர்த்​தி, தன் ஆட்​டோ​வில் 2 பெண்​களை அழைத்து வந்து சாந்தி வீட்​டுக்​குள் நுழைவதும், சிறிதுநேரம் கழித்து அங்​கிருந்து வெளி​யேறு​வதும் தெரிய வந்​தது.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், மாமி​யார் வீட்​டிலிருந்து 24 சவரன் நகை, ரூ.2 லட்​சம்​ பணத்தை தோழிகளு​டன் சேர்ந்து திருடியதை தட்​சிணா​மூர்த்தி ஒப்​புக்​கொண்​டார்.

இதையடுத்​து, தட்​சிணா​மூர்த்​தி, அவருக்கு உடந்​தை​யாக இருந்த தீபா (29), மற்​றும் 17 வயது சிறுமியை போலீ​ஸார் கைது செய்து நகை, பணத்தை மீட்​டு சிறை​யில்​ அடைத்​தனர்​.

SCROLL FOR NEXT