புருஷோத்தமன்

 
க்ரைம்

தடையில்லா சான்றுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சிவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (41). இவருக்கு குவாரி நடத்த தடையில்லா சான்றிதழ் வழங்க ஓசூரில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் புருஷோத்தமன், ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முதல் தவணையாக ரூ.3 லட்சத்தை சேலத்தைச் சேர்ந்த இடைத்தரகர் சிவக்குமாரிடம் வழங்குமாறு புருஷோத்தமன் கூறியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த பிரதாப், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்தை சிவக்குமாரிடம் வழங்க பிரதாப் சென்றார். அப்போது அவர், ஓசூர் வந்துவிட்டதால், அவரது உதவியாளர் முருகனிடம் பணத்தை வழங்குமாறு புருஷோத்தமன் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பிரதாப், ரூ.3 லட்சத்தை முருகனிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயகுமார், காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் முருகனை கையும் களவுமாகப் பிடித்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், பொறியாளர் புருஷோத்தமன், இடைத்தரகர் சிவக்குமார், முருகன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT