க்ரைம்

குற்றச் செயல்களைத் தடுக்க சென்னையில் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் 285 ரவுடிகள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் அடுத்​தடுத்து 2 கொடூரக் கொலைகள் நடை​பெற்ற நிலை​யில், மேலும் குற்​றச் சம்​பவங்​கள் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில் போலீ​ஸார் மேற்​கொண்ட நடவடிக்​கை​யில் 285 ரவுடிகள் கைது செய்​யப்​பட்​டனர்.

சென்னை பெசன்ட் நகரில் கடந்த வாரம் சனிக்​கிழமை தவெக பிர​முகர் கண்​ணன் கொடூர​மாக வெட்டி படு​கொலை செய்​யப்பட்​டார். சட்​டப் பேரவை கூட்​டத்​தொடர் நடை​பெற்ற நாட்​களி​லேயே இந்​தக் கொலை சம்​பவம் நடை​பெற்​றது.

இந்த பரபரப்பு அடங்​கு​வதற்​குள், திரு​வொற்​றியூர் பகு​தி​யில் பிரதீப் ராஜ் என்ற துணை நடிகர் கொலை செய்​யப்​பட்​டார். இந்த 2 கொலைகளும் முன்​விரோதம் காரண​மாக நடை​பெற்​ற​தாக கூறப்​படும் நிலை​யில், சென்​னை​யில் அடுத்​தடுத்து நடந்த கொலை சம்​பவங்​கள் பொது​மக்​களிடம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தின.

இதையடுத்​து, சென்​னை​யில் மேலும் இது​போன்ற கொலை சம்​பவங்​கள் நடை​பெறாமல் தடுக்​கும் வகை​யில், காவல் ஆணை​யர் அமல்​ராஜ் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தீவிரப்​படுத்த உத்​தர​விட்​டார்.

குறிப்​பாக, முன்​விரோதம் கொண்​டுள்ள ரவுடிகள் மற்​றும் அவர்​களது கும்​பல்​கள், பல்​வேறு குற்ற வழக்​கு​களில் தொடர்​புடைய​வர்​கள், நீதி​மன்​றம் பிடி​யாணை பிறப்​பித்​தும் ஆஜரா​காமல் தலைமறை​வாக உள்​ளவர்​கள் மற்​றும் காவல்​துறை​யின் சரித்​திரப் பதிவேட்​டில் இடம்​பெற்​றுள்ள குற்​ற​வாளி​களை கண்​டறிந்து கைது செய்​யும் நடவடிக்​கையை போலீ​ஸார் தொடங்​கினர்.

இதற்​காக அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யில் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு பல்​வேறு இடங்​களில் அதிரடி சோதனை மற்​றும் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

ஏற்​கெனவே குற்​றப்​பின்​னணி கொண்​ட​வர்​கள், சரித்​திரப் பதிவேடு பராமரிக்​கப்​பட்டு வரும் ரவுடிகள், தலைமறை​வாக இருந்​தவர்​கள் உள்​ளிட்​டோரை போலீ​ஸார் தீவிர​மாக தேடினர்.

சென்னை முழு​வதும் நேற்று முன்​தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை நடத்​தப்​பட்ட தீவிர தேடு​தல் வேட்​டை​யில், வடக்கு மண்​டலத்​தில் 108 பேர், மேற்கு மண்​டலத்​தில் 38 பேர், தெற்கு மண்​டலத்​தில் 94 பேர், கிழக்கு மண்​டலத்​தில் 45 பேர் என குற்​றப் பின்​னணி உடைய மற்​றும் சரித்​திரப் பதிவேடு ரவுடிகள் மொத்​தம் 285 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்​.

சென்​னை​யில் சட்​டம்​ - ஒழுங்கை பாது​காக்​க​வும், குற்​றச் சம்​பவங்​களை தடுக்​க​வும் காவல் ​துறை தொடர்ந்து தீவிர நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​வ​தாக காவல் ஆணை​யர் அமல்​ராஜ் தெரி​வித்​துள்​ளார்.

மேலும், சட்​டம்​ - ஒழுங்​குக்கு குந்​தகம் விளைவிக்​கும் வகை​யிலோ, பொது​மக்​களுக்கு அச்​சுறுத்​தல் ஏற்​படுத்​தும் வகை​யிலோ குற்​றச் செயல்​களில் ஈடு​படும் நபர்​கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்​ என்​றும்​ அவர்​ எச்​சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT