க்ரைம்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 23 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

திருப்பூர்: ​திருப்​பூரில் உரிய ஆவணங்​கள் இன்றி தங்​கி​யிருந்த வங்​கதேசத்​தைத் சேர்ந்த 23 பேருக்கு நீதி​மன்​றம் தலா 2 ஆண்டு சிறை தண்​டனை விதித்​தது.

திருப்​பூர் மாநகரில் எந்​த​ வித​மான ஆவணங்​களும் இல்​லாமல் சட்ட விரோத​மாக தங்​கி​யிருந்த வங்​கதேசத்​தைச் சேர்ந்த 23 பேர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​திருந்​தனர்.

இதுதொடர்​பான 3 வழக்​கு​களில் வங்​கதேசத்​தைச் சேர்ந்த சலீம், ரிபோன், முகமது மிலோன், அப்​துல் ஹக்​கீம், முகமது அப்​துஸ் மன்​னன், முகமது ஆசிர் உட்​டின், சஹீருல் இஸ்​லாம், ரபி​யுள், முகமது ரூபெல், முகமது ரபீக்​அலி, அப்​துல் அமீன், முகமது ஜோஷிம் உட்​டின், அபு ஹனீப், முகமது ஷபீகுல் இஸ்​லாம், முகமது சிஃ​பான் மியா, முகமது துஹின்​மி​யா, முகமது மிலோன், அசதுல் இஸ்​லாம், முகமது சுவேல் ஹுசேன், முகமது சுஜோன் ஷேக், முகமது பப்​லு, முகமது முசுத் ரானா, முகமது இமாம் ஹுசேன்​ஆகியோர் கைது செய்​யப்​பட்​டிருந்​தனர்.

இந்த வழக்கு திருப்​பூர் எஸ்​சி, எஸ்டி சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்த நிலை​யில், இறு​திக்​கட்ட விசா​ரணை நிறைவடைந்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பு வழங்​கி​னார். இதில் அனைவருக்கும் தலா 2 ஆண்டு சிறையும் சலீம், முகமது ரூபெல், முகமது சிபான் மியா ஆகியோருக்கு ரூ.12,000 அபராதமும் மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

SCROLL FOR NEXT