அஜய், மகேஸ்வரன்

 
க்ரைம்

மாமல்லபுரத்தில் மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் - 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

கல்பாக்கம்: ​மாமல்லபுரம் அருகே சிறுமியை கடத்​தி, கூட்டு பாலியல் துன்​புறுத்​தலில் ஈடு​பட்ட இளைஞர்கள் 2 பேர் கைது செய்​து, சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம் மாமல்​லபுரம் அருகே உள்ள கிராமத்​தைச் சேர்ந்த 14 வயது சிறுமி 7-ம் வகுப்பு படிக்​கிறார். வீட்​டில் கழி​வறை வசதி இல்​லாத​தால், தின​மும் அதி​காலை வீட்​டின் அருகே உள்ள வயல்​வெளி பகு​திக்​குச் செல்​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளார்.

கடந்த 22-ம் தேதி அதி​காலை இயற்கை உபாதை கழிப்​ப​தற்​காக சிறுமி சென்​றுள்​ளார். இதை நோட்​ட​மிட்ட 2 இளைஞர்​கள், அவரைப் பின்​தொடர்ந்து சென்​றுள்​ளனர்.

சிறுமி​யின் வாயில் துணியை திணித்​து, அருகே உள்ள ஆள்​நட​மாட்​டம் இல்​லாத கட்​டிடத்​துக்கு அவரை தூக்​கிச் சென்​றுள்​ளனர். பின்​னர், சிறுமியை பாலியல் ரீதியாக துன்​புறுத்த முயன்​றுள்​ளனர். அவர்​களிடம் இருந்து தப்​பிக்க சிறுமி முழு பலத்​துடன் போராடி​யுள்​ளார்.

இதையடுத்​து, இளைஞர்​கள் இரு​வரும் அருகே கிடந்த கட்​டை​யால் மாண​வி​யின் தலை​யில் பலமாக தாக்​கி​விட்​டு, அங்​கிருந்து தப்​பினர். இதற்​கிடையே, நீண்ட நேரம் ஆகி​யும் மகள் வீடு திரும்​பாத​தால் சந்​தேகம் அடைந்த பெற்​றோர், அக்​கம் பக்​கத்​தில் அவரைத் தேடினர்.

அருகே உள்ள கட்​டிடத்​துக்​குச் சென்று பார்த்​த​போது, ரத்த காயங்​களு​டன் மகள் மயங்​கிக் கிடப்​ப​தைக் கண்டு அதிர்ச்சி அடைந்​தனர். உடனடி​யாக அவரை மீட்டு செங்​கல்​பட்டு அரசு பொது மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர்.

அங்கு தொடர் மருத்​து​வக் கண்​காணிப்​பில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாமல்​லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலை​ய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு சிறுமியை பாலியல் துன்பறுத்தியது தொடர்பாக கல்​பாக்​கம் அடுத்த வாயலூர் பகு​தி​யைச் சேர்ந்த மகேஸ்​வரன் (20), அவரது நண்​பர் காரைத்​திட்டு பகு​தி​யைச் சேர்ந்த அஜய் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மகேஸ்​வரன், திருக்​கழுகுன்​றத்​தில் உள்ள தனி​யார் பாலிடெக்​னிக் கல்​லூரி​யில் 3-ம் ஆண்டு படித்து வரு​வதும், அஜய், மரக்​காணம் பகு​தி​யில் உள்ள இறால் பண்​ணை​யில் கூலித் தொழிலா​ளி​யாக வேலை செய்து வரு​வதும் விசாரணையில் தெரிய​வந்​தது.

கைது செய்யப்பட்ட இரு​வரை​யும் திருக்​கழுகுன்​றம் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, செங்​கல்​பட்​டு மாவட்​ட சிறை​யில்​ அடைத்​தனர்​.

SCROLL FOR NEXT