கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேர். (உள்படம்) கொல்லப்பட்ட ஜான்.

 
க்ரைம்

9 பேர் கொண்ட கும்பலால் நாங்குநேரி அருகே 2 பேர் படுகொலை - நடந்தது என்ன?

பொதுமக்கள் சாலை மறியலால் பதற்றம்; 7 பேர் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாவட்​டம் நாங்குநேரி அருகே 2 பேர் கொலை செய்​யப்​பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மறியலில் ஈடு​பட்​ட மக்களுக்​கும், போலீ​ஸாருக்கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

இதன் தொடர்ச்சியாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். நாங்குநேரி அருகே பெரும்​பத்து பகு​தி​யில் நேற்று முன்​தினம் இரவில் மோட்​டார் சைக்​கிள்களில் வந்த 9 பேர் கும்​பல், சாலையோர டீக்​கடை​யில் இருந்​தவர்களை கண்​மூடித்​தன​மாக அரிவாளால் வெட்​டியது.

          

இதில், பெரும்​பத்து இந்​திரா காலனியைச் சேர்ந்த ஜான் (42), அப்​பகு​தி​யிலுள்ள செங்​கல் சூளை​யில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த திரி​நாத் கட்டா (50) ஆகியோர் உயி​ரிழந்​தனர்.

பெரும்​பத்து பகு​தி​யைச் சேர்ந்த நெல்​சன், பிர​பாகரன், ராம​சாமி, வீராங்​குளம் கணேசன் ஆகியோர் பலத்த காயமடைந்​தனர். வெட்​டி​விட்டு அங்​கிருந்து மோட்​டார் சைக்​கிள்​களில் தப்​பிச் சென்ற அந்​தக் கும்​பல், புளி​யங்​குளம் அருகே சசிகு​மார் என்​பவரை​யும் அரி​வாளால் தாக்​கி​யுள்​ளது.

இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி நடந்த மறியல். | படம்: மு.லெட்சுமி அருண் |

காயமடைந்​தவர்​கள் திருநெல்​வேலி அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அப்​பகு​தி​யில் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில், இரட்டைக்​கொலைக்கு காரண​மானவர்​களை கைது செய்ய வலி​யுறுத்​தி, நேற்று அப்​பகு​தி​யைச் சேர்ந்த கிராம மக்​கள் நாங்குநேரி- ஏர்​வாடி சாலை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்னர் நெல்லை- கன்​னி​யாகுமரி தேசிய நெடுஞ்​சாலை​யில் மறியல் செய்ய புறப்​பட்​டனர். இதனால் அவர்​களை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே தள்​ளு​ முள்ளு உரு​வானது.

‘ஆட்​சி​யர் தலை​மையி​லான அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும். உயி​ரிழந்​தவர்களின் குடும்​பங்​களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும்’ என வலி​யுறுத்​தி, மறியல் போராட்​டம் மாலை​யிலும் தொடர்ந்​த​தால் பதற்​றம் நில​வியது.

அப்​பகுதி​யில் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர். கொலை​யான ஜான் குடும்​பத்​தினருடன் விசிக தலை​வர் திருமாவளவன் வீடியோ கால் மூலம் பேசி ஆறு​தல் தெரி​வித்​தார்.

இதனிடையே, காவல்​துறை கூடு​தல் தலைமை இயக்​குநர் (சட்​டம் ஒழுங்​கு) மகேஸ்​வர் தயாள், தென் மண்டல காவல்​துறை தலை​வர் விஜயேந்​திர பிதா​ரி, திருநெல்​வேலி சரக காவல்​துறை தலை​வர் சரவணன், திருநெல்​வேலி மாவட்ட காவல்​துறை கண்​காணிப்​பாளர் பிரசன்ன குமார் ஆகியோர் தலை​மை​யில் காவல்​துறை அதி​காரி​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் திருநெல்​வேலி​யில் நேற்று நடந்​தது.

குற்​ற​வாளி​களை கைது செய்ய 14 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், 6 பேரை பிடித்து விசா​ரித்து வரு​வ​தாக காவல்​துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​திருந்தன.

7 இளைஞர்கள் கைது

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் நேற்று மாலை 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் விவரம்: தென்னிமலை கண்ணன் (21), சுப்பையா சுபாஷ் (19), அந்தோனிமைக்கேல் (18), கல்யாணி (19), நாங்குநேரி நம்பிநகர் ராஜா (19), வள்ளியூர் உச்சிமாகாளி (20), நெடுங்குளம் வசந்தகுமார் (21). இவர்களிடம் விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT