க்ரைம்

சவுகார்பேட்டையில் கடைக்குள் புகுந்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை

செய்திப்பிரிவு

சென்னை: பாரி​முனை பிர​காசம் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அங்​கித் திலீப் மோர் (26). இவர் சவு​கார்​பேட்டை மின்ட் தெரு​வில் தங்கம் மற்​றும் வெள்ளி நகைகளை உருக்​கும் கடை நடத்தி வரு​கிறார்.

மேலும் தங்க நகை​களின் தரத்தை ஆய்வு செய்​யும் வேலை​யும் செய்​கிறார். அவர் நேற்று முன்​தினம் இரவு கடை​யில் தனி​யாக இருந்​தார்.

அப்​போது அங்கு திடீரென முகமூடி அணிந்து வந்த 3 பேர், அங்​கித்தை தாக்கி கடையி​லிருந்த ஒன்​றரை கிலோ தங்க நகைகளை கொள்​ளை​யடித்து தப்​பியோடினர்.

அப்​போது அங்​கித், பக்​கத்து கடை​யில் இருந்த சிலர் உதவி​யுடன் தப்பி ஓடிக் கொண்​டிருந்த 3 பேரை​யும் விரட்​டி​னார். இதில் ஒரு​வரை மட்​டும் பிடித்​தார்.

மற்ற இரு​வரும் நகைகளு​டன் தப்​பினர். பிடிபட்ட நபர் யானைக்​க​வுனி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டார். போலீஸ் விசா​ரணை​யில் பிடிபட்​ட​வர், யானைக்​க​வுனி வால்​டாக்ஸ் சாலை​யைச் சேர்ந்த ஆறு​முகம் என்ற அருண் (22) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து போலீ​ஸார் அருணை கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் அருணுடன் சேர்ந்​து, கொள்​ளை​யில் ஈடு​பட்​டது அதே பகு​தி​யைச் சேர்ந்த லோகேஷ் (23), ஹேராம் என்ற ரமணா (24) என்​பதும், அவர்​கள் வண்​ணாரப்​பேட்டை பழைய கல்​லறைச் சாலை​யில் பதுங்​கி​யிருப்​பதும் தெரிய​வந்​தது.

இதையடுத்து அங்​குச் சென்ற போலீ​ஸார், லோகேஷை​யும், ரமணாவை​யும் கைது செய்​தனர்​. மேலும்​ அவர்​கள்​ கொள்​ளை​யடித்​த நகைகளும்​ மீட்​கப்​பட்​டன.

SCROLL FOR NEXT