சென்னை: பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் அபுபக்கர் சித்திக். தலைமறைவாக இருந்த அவரை 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம், ராய்சூட்டியில் கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
உடன், அவரது கூட்டாளியான முகமது அலியும் கைது செய்யப்பட்டார். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அவர் தங்கியிருந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரிக்க ஆந்திர என்ஐஏ அதிகாரிகள் அபுபக்கர் சித்திக்கை ஒருவார காலம் காவலில் எடுத்து புழல் சிறையிலிருந்து ஆந்திரா அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்நிலையில், விசாரணை முடிந்து அபுபக்கர் சித்திக் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.