சென்னை: கோயம்பேடு அண்ணா பழ அங்காடியில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து, அங்கேயே தங்கி இருப்பவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முபாரக் என்ற தாபாருல் (20). இவர் கடந்த 29-ம் தேதி மதியம், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு வாங்கிக் கொண்டு, திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், முபாரக்கை தடுத்து தாக் கியது. பின்னர், கத்திமுனையில் மிரட்டி அவரிட மிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு கும்பல் தப்பியது. அதிர்ச்சி அடைந்த முபாரக், இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், வழிப்பறியில் ஈடுபட்டது வியாசர்பாடி யைச் சேர்ந்த ஆகாஷ் (23), மனோஜ் (20), கோயம் பேடு தீபக் (20) என்பது தெரிந்தது. தலைமறை வாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.