க்ரைம்

இன்சூரன்ஸ் பணத்துக்காக மகனை கொன்ற பெண்

செய்திப்பிரிவு

லக்னோ: உ.பி.யின் கான்பூர் தெஹாத் பகுதியை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவர் தனது கணவர் இறந்த பிறகு மாயங்க் என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.

இதற்கு அப்பெண்ணின் 23 வயது மகன் பிரதீப் எதிர்ப்பு தெரிவித்தார். பிரதீப் ஆந்திராவில் வேலை பார்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் தனது காதலன் மாயங்க், அவரது சகோதரர் ரிஷி ஆகியோருடன் சேர்ந்து பிரதீப்பை கொல்ல திட்டமிட்டார். பிறகு மாயங்க், ரிஷி ஆகிய இருவரும் பிரதீப் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கினர்.

தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த பிரதீப்பை காரில் அழைத்துச் சென்று, தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்தனர். பிரதீப்பின் மாமா, தாத்தா அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி மாயங்க் மற்றும் ரிஷியை கைது செய்தனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக தாயும் அவரது காதலனும் சேர்ந்து பிரதீப்பை கொலை செய்தது தெரியவந்தது.

SCROLL FOR NEXT