துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனியார் வாடகை கார் ஓட்டுநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடத்த டியூட் திரைப்படம், நேற்று முன் தினம் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்குவதற்காக, மகராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த துணை நடிகை ஆஸ்தா (20) கடந்த 11-ம் தேதி சென்னை வந்தார்.
பெரியமேட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்துக்கு செல்வதற்காக ஆஸ்தா, தனியார் நிறுவனத்தின் வாடகை காரை புக் செய்திருந்தார். அந்த காரில் அவர் தாம்பரம் சென்று கொண்டிருந்த போது, கார் ஓட்டுநர் கணேஷ் பாண்டியன், துணை நடிகை ஆஸ்தாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று 5 நாட்கள் கழித்து ஆஸ்தா, பெரியமேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த கார் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.