க்ரைம்

ஏழுமலையான் பக்தர்களிடம் இடைத்தரகர் ரூ.4 லட்சம் மோசடி

என்.மகேஷ்குமார்

திருமலை: தெலங்கானாவை சேர்ந்த சில பக்தர்கள் தங்களுக்கு திருப்பதி எழுமலையான் கோயில் ஆர்ஜித சேவைகளும், திருமலையில் தங்க சொகுசு பங்களாவும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என இடைத்தரகர் ஒருவரை அணுகியுள்ளனர். அவர், இதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என கூறியுள்ளார்.

இதையடுத்து மொத்த தொகையையும் தெலங்கானா பக்தர்கள் செல்போன் மூலம் அனுப்பி உள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு அந்த இடைத்தரகர் தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பக்தர்கள் திருமலை 2-வது காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

இதன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவான இடைத்தரகரை தேடி வருகின்றனர். இது போன்ற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு திருமலை போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT