க்ரைம்

குடியரசு துணைத் தலைவர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் 5-வது டிரஸ்ட் குறுக்குத் தெருவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீடு உள்ளது. அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சற்று நேரத்தில் வெடிக்கும் எனவும் டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது.

இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் அங்கு சென்றனர். ஆனால் குடியரசு துணைத் தலைவர் அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு ஒராண்டுக்கு முன்னரே போயஸ் கார்டனில் வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது. போலீஸார் சோதனை மேற்கொண்டதில் சந்தேகப் படும்படியாக எந்தப்பொருளும் கிடைக்கவில்லை. இதனால் இது புரளி கிளப்பும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

SCROLL FOR NEXT