மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக தனிப்படை போலீஸ் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனை சேர்த்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், ராமச்சந்திரனை இன்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.