நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நேற்று வெடி குண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன்  கோயில் வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். 
க்ரைம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் போலீஸ் சோதனை

கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு வைத்ததாக வந்த இ-மெயிலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத முகவரி மூலம் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது, இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா உத்திரவின்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் டயானா உதவியுடன் ஆட்சியர் அலுவலக வளாகம், நீதிமன்றம், ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இ-மெயிலில் குறிப்பிட்டது போல் வெடி குண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அவை வெறும் புரளி எனவும் தெரியவந்தது. எனினும், மேற்குறிப்பிட்ட பகுதியில் காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மேற்குறிப்பிட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT