சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக சுங்கச்சாவடி மேலாளரை மாயனூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன்(45). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் மற்றும் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி மனித வள மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சில தகவல்களை சமூக வலைதளங்களில் அலெக்ஸ் பாண்டியன் பதிவிட்டிருந்தார்.
அந்தத் தகவல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக புகார்கள் வந்ததால், வதந்தி பரப்பியதாக மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை நேற்று கைது செய்தனர்.