பிரகாஷ் 
க்ரைம்

கோழிக்கு வைத்த குறி தப்பி இளைஞர் உயிர் பறிபோனது: கல்வராயன்மலை சோகம்!

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் கோழியை துப்பாக்கியால் சுடும் போது குறி தவறியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மகன் அண்ணாமலை. இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு கோழிக் குழம்பு வைப்பதற்காக, அவர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் அப்பகுதியில் சுற்றித்திரிந்த கோழியை சுட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கோழிக்கான குறி தவறி, பக்கத்து வீட்டில் இருந்த பிச்சையன் மகன் பிரகாஷ் தலை மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரகாஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கரியாலூர் போலீஸார் விசாரிக்கின்றனர். இதில் முன் விரோதம் ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT