திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கான தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி, மதரஸாவில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், 14 வயது மாணவி ஒருவருக்கு விடுதி காப்பாளர் அபூபக்கர் (46) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி, விடுதியின் மற்றொரு காப்பாளரான வகிதா (43) என்பவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விடுதி காப்பாளர்கள் அபூபக்கர், வகிதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.