பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி, வயிற்று வலியால் அவதிப் பட்டார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். விசாரணையில் சிறுமியின் வீட்டுக்கு அருகே வசித்த திண்டுக்கல்லை சேர்ந்த காமாட்சி (27) என்பவரும். சிறுமியின் ஆண் நண்பரான 15 வயது சிறுவனும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து காமாட்சி மற்றும் அந்த சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவர்கள் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.