கோரக்பூர்: உ.பி.யின் கோரக்பூர் மாவட்டம், பிப்ராச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீபக் குப்தா (19). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் வீட்டுக்கு வெளியில் சிலர் மாடுகளை கடத்த முயன்றதை தடுக்க சென்றார். ஆனால் கடத்தல் கும்பல் தீபக் குப்தாவை தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இதுவரை 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோரக்பூர் எஸ்எஸ்பி ராஜ் கரண் நய்யார் நேற்று கூறுகையில், “கொலையில் தொடர்புடைய ரஹீம் என்பவர் குஷிநகரில் என்கவுன்ட்டருக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
மேலும் அஜாப் உசைன் என்பவரை கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். இவர்களை தவிர சோட்டு, ராஜு ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.