சென்னை: ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். கடந்த 6-ம் தேதி சென்னை டிஜிபி அலுவலகம் அருகே புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ‘ஏர்போர்ட்’ மூர்த்தியிடம் விசிகவினர் சிலர், தகராறு செய்து திடீரென அவரை விரட்டித் தாக்கினர்.
இதில் நிலைகுலைந்த அவர், சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினார். இதுதொடர்பாக, இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவிட்டார்.