க்ரைம்

விருத்தாசலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் - மாணவர்கள் பத்திரமாக மீட்பு

ந.முருகவேல்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில், இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்நேரத்தில், ரயில் எதுவும் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக பூவனூர் கிராம மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கி காயமடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சையை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதனிடையே, விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT