சென்னை: நிச்சயதார்த்தம் செய்துவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், விரக்தியில் 7-வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா(25). மாற்றுத் திறனாளியான இவர் பிபிஏ படித்து முடித்து வீட்டில் இருந்துவந்தார். சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன்(26).
ஹர்ஷிதாவும், தர்ஷனும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் இருவருக்கும் விமரிசையாகநிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்புதிடீரென ஹர்ஷிதாவிடம், ‘உன்னை திருமணம் செய்ய விருப்பம் இல்லை, திருமணத்தை நிறுத்திவிடலாம்’ என தர்ஷன் கூறியதாகத்தெரிகிறது.
இதனால், ஹர்ஷிதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறிஅழுதுள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு, வேப்பேரியில் தர்ஷன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ஹர்ஷிதாவின் குடும்பத்தினர் வந்து, தர்ஷன்குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹர்ஷிதா, தர்ஷன் இருவரும் மற்றொரு அறையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் திடீரென ஹர்ஷிதா கோபத்துடன் வேகமாக மொட்டை மாடிக்குச் சென்று தர்ஷனிடம் ‘இப்போதாவது என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?’ எனக் கேட்டதாக தெரிகிறது. அப்போது தர்ஷன்,என் மீது எந்தத் தவறும் இல்லைஎனக் கூறி, திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பது போலவே பேசியுள்ளார். இதனால், விரக்தியில் ஹர்ஷிதா, 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். வேப்பேரி போலீஸார் ஹர்ஷிதாஉடலை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, தர்ஷனை கைதுசெய்துவிசாரித்து வருகின்றனர்.