க்ரைம்

கோவை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் கடத்தல் ட்ரோன்கள் பறிமுதல்

இல.ராஜகோபால்

கோவை: ஷார்ஜாவில் இருந்து இன்று காலை கோவை வந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 37 லட்சம் மதிப்பிலான ட்ரோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜா - கோவை இடையே நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை கோவை வந்த விமானத்தில் சந்தேகத்தின் பேரில் சில பயணிகளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது அதில் 856 எலக்ட்ரானிக் சிகரெட், ட்ரோன்கள்-10, மைக்ரோ ஃபோன்-36 ஆகிய பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.09 லட்சமாகும்.

இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட பயணிகள் திருவாரூரை சேர்ந்த அப்துல் ரஹீம், தூத்துக்குடியைச் சேர்ந்த சையத் சிராஜ்தீன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜெயினுலாபுதீன், முகமது அப்சல். திருச்சியை சேர்ந்த முகமது சித்திக் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT