புதுப்பிள்ளையார்குப்பம் அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள். 
க்ரைம்

பண்ருட்டி நகை கொள்ளை வழக்கில் மேலும் 6 பேர் கைது: மாந்திரீகம் செய்வதாக மக்களை ஏமாற்றியது அம்பலம்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: பண்ருட்டி அருகே அரசு மருத் துவர் வீட்டில் 158 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் மேலும் 6 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து மேலும் 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் புது பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (45). அரசு மருத்துவராக பணியாற்றி வரு கிறார். இவரது வீட்டிலிருந்த 158 பவுன் நகைகள் ஜூலை 24-ம் தேதி கொள்ளை போனது. இச்சம்பவம் தொடர்பாக கடலூர் எஸ்பி ஜெயக்குமார், பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார்.

தனிப்படையினரின் முதற்கட்ட விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தை தலைமையேற்று நடத்தியதாக வேலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (35) மற்றும் அவரது கூட்டாளிகளான தர்மபுரியைச் சேர்ந்த முருகன், அசோக்குமார், தினேஷ்குமார், ஜெகதீசன் உள் ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 94 பவுன் நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கில் மேட்டூரைச் சேர்ந்த மூர்த்தி (35), வல்லரசு (26) ஆகிய இருவரை தேடிவந்த நிலையில், அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியதில், நகை திருட்டு சம்பவம் கூட்டுச் சதியின் கீழ் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக புதுப்பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (44), சி.என். பாளையத்தைச் சேர்ந்த சேகர் (42), அரியலூர் ஆண்டிமடத்தைச் சேர்ந்த அன்பழகன் (52), ஈரோடு மாவட்டம் ஜோதிபுரம் சென்னம்பட்டியைச் சேர்ந்த சண்மு கசுந்தரம் (68) ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸார் நேற்று பண்ருட்டியில் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சம்பவம் நடைபெற்றது எப்படி? - கைது செய்யப்பட்ட புதுப்பிள் ளையார் குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அவ்வப்போது வெளியூர் சென்று சூதாடுவது வழக்கம். அப்போது கோவிந்தராஜூக்கும், சி.என். பாளையத்தைச் சேர்ந்த சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சூதாட்ட விளையாட்டில் 8 ஏக்கர் நிலத்தை விற்று கடனாளியான கோவிந்தராஜ், என்ன செய்வ தென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்.

அப்போது அதே ஊரில் வசிக்கும் மருத்துவர் ராஜா வீட்டில் நகை பணம் இருப்பதை அறிந்து, அவரது வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடிக்க சேகருடன் இணைந்து திட்டம் தீட்டினார். சேகர் ஏற்பாட்டின்பேரில் வேலூரைச் சேர்ந்த சுரேஷை அணுகினர். இதையடுத்து சுரேஷ் தலைமையில் கூட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட முருகன் மற்றும் அவரது ஆட்கள் மாந்திரீகம் செய்வது போன்று புதுப்பிள்ளையார்குப்பம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

மருத்துவர் ராஜா வீட்டில் தங்கி மாந்திரீகம் செய்வதுபோல கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். 3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் சிறப்பாக புலனாய்வு செய்து, சம்பவத்தில் தொடர்பு டையவர்களை கைது செய்து, நகைகளையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாரை கடலூர் எஸ்பி ஜெயக்குமார் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

SCROLL FOR NEXT