பழநி: பழநி அடுத்த பெருமாள்புதூரில் விவசாயி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள பெருமாள்புதூரைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி என்பவரது வீட்டில் நள்ளிரவில் (ஆக.5) மர்மநபர்கள் பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இதில், வீட்டின் முன்பகுதியில் இருந்த ஓலைக் குடிசையில் தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பழநி தாலுகா போலீசார், பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.